Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தி ஆலோசனை

By: Karunakaran Sat, 19 Dec 2020 7:08:41 PM

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தி ஆலோசனை

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனால், சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரானார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தொடர் தோல்வி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகியதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால் கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினார்கள்.

கட்சியை பலப்படுத்த முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரி சோனியாகாந்திக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கபில்சிபல் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிருப்தி தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்திவருகிறார்.

sonia gandhi,new leader,congress party,rahul gandhi ,சோனியா காந்தி, புதிய தலைவர், காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டம் ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது, இதில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இன்றைய கூட்டத்தில் சோனியாகாந்தி முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

பொது முடக்கத்துக்கு பிறகு சோனியாகாந்தி மூத்த தலைவர்களை முதல் முறையாக நேரில் சந்திக்கிறார். கடந்த காலங்களில் வீடியோ கான்பரஸ் மூலமே ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags :