Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்த சோனு சூட்

மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்த சோனு சூட்

By: Karunakaran Mon, 27 July 2020 10:37:09 AM

மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்த சோனு சூட்

நாட்டில் பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால், நாடு முழுவதும் பல விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார்.

sonu sood,tractor,andhra farmer,cows ,சோனு சூத், டிராக்டர், ஆந்திர விவசாயி, மாடுகள்

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி டீக்கடை வியாபாரம் செய்து வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக டீக்கடை வியாபாரம் நசிந்து போனது. இதனால் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார். உழவு மாடுகள் வாங்க பணமில்லாத காரணத்தால், தன் இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை கண்டு மனவருத்தம் அடைந்த இந்தி நடிகர் சோனு சூட், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். தற்போது, அந்த ஆந்திர விவசாயிக்குசோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார்.

Tags :