Advertisement

பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியாவிற்கு வருகை

By: Karunakaran Sat, 15 Aug 2020 2:36:00 PM

பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியாவிற்கு வருகை

பெரும்பாலும் நாட்டின் தலைவர்களுக்காக பிரத்யேக தனிவிமானம் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டின் மிக முக்கிய பிரமுகர்கள் ஆவர். தற்போது இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.க்கள்) ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏர் இந்தியாவின் இந்த போயிங் 747 ரக விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது. தற்போது நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்காக 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

sophisticated aircraft,prime minister,india,modi ,அதிநவீன விமானம், பிரதமர், இந்தியா, மோடி

190 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம்மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் தற்போது தயாராகி விட்டது.

இதனால் முதல் போயிங் 777 விமானத்தை பெறுவதற்காக ஏர் இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். அவர்களுடன் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும் உடன் சென்று உள்ளனர்.இந்த போயிங் 777 விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பல அதிநவீன வசதிகளை கொண்டதாகும்.

Tags :
|