Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயம்

தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயம்

By: Karunakaran Thu, 19 Nov 2020 12:59:35 PM

தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயம்

தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தைவானை தனது நாட்டின் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. மேலும், தைவானை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி சீனா தனது போர் விமானங்களை பறக்கச்செய்வதும் தினசரி நிகழ்வாகவே உள்ளது.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தைவான் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்நாட்டிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. மேலும், தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் தைவான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப் 16 ரக போர்விமானங்கள் தைவானிடம் 150-க்கும் அதிகமான அளவில் உள்ளது.

sophisticate,f16 fighter jet,training,taiwan ,அதிநவீன, எஃப் 16 போர் ஜெட், பயிற்சி, தைவான்

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் தைவானுக்கு எப் 16 ரக போர் விமானங்கள் பெரும் உதவி செய்கின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, 44 வயதுடைய விமானியான கர்னல் ஜியாங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது.

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போர் விமானம் மாயமானதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 150-க்கும் அதிகமான எப் 16 ரக போர் விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags :