Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு வருடத்திற்குள் முதல் மந்திரியாக அறிவிக்க சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியாங்கா காந்தியின் வட்டாரங்கள் தகவல்

ஒரு வருடத்திற்குள் முதல் மந்திரியாக அறிவிக்க சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியாங்கா காந்தியின் வட்டாரங்கள் தகவல்

By: Karunakaran Sat, 18 July 2020 1:25:56 PM

ஒரு வருடத்திற்குள் முதல் மந்திரியாக அறிவிக்க சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியாங்கா காந்தியின் வட்டாரங்கள் தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது.

சச்சின் பைலட்டின் துணையுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளனர். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.கள் அரியானா மாநிலம் மனேசரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

sachin pilot,priyanka gandhi,congress party,rajastan ,சச்சின் பைலட், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான்

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாதேராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சச்சின் பைலட் ஒரு வருடத்திற்குள் தான் ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று பலமுறை கேட்டுக் கொண்டார்.அவர்கள் சச்சினின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இல்லை என்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க சச்சின் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியங்காவுடன் 3 மணி நேரம் பைலட்டின் போனில் உரையாடிய பிறகுதான் அவரது பதவி பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பைலட் கோரிக்கை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே, பைலட்டை ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்க கட்சி முடிவு செய்தது என்று பிரியங்கா காந்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :