Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலின் மையமாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது; சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா பரவலின் மையமாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது; சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By: Nagaraj Fri, 12 June 2020 11:05:47 AM

கொரோனா பரவலின் மையமாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது; சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா பரவல் மையம்.. ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவலின் மையமாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

''ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா கொரோனா பரவலின் மையமாக விளங்குகின்றது. அல்ஜீரியா, கேம்ரூன் ஆகிய நாடுகளும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்களிடையே பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்''. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona,vaccine,scientists,south africa ,கொரோனா, தடுப்பூசி, விஞ்ஞானிகள், தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 55,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,210 பேர் பலியாகியுள்ளனர். 26,099 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|