Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளில்லா விமானங்களை உருவாக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட தென் கொரிய அதிபர்

ஆளில்லா விமானங்களை உருவாக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட தென் கொரிய அதிபர்

By: Nagaraj Wed, 28 June 2023 9:30:03 PM

ஆளில்லா விமானங்களை உருவாக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட தென் கொரிய அதிபர்

சியோல்: தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. அதனால் கொரிய தீபகற்பம் போர் சூழ்ந்த நிலையில் இருந்தது. இதனையடுத்து வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முத்தரப்பு போர் பயிற்சியில் ஈடுபட்டன.

இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தொடர் பயிற்சியின் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் சியோல் மீது வடகொரியா 5 ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. இதை தென்கொரிய ராணுவம் தடுத்து நிறுத்தியது. எனினும் இந்த சம்பவம் அங்கு தீவிரவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது.

drones,north korea,order,president,south korea,threat, ,அச்சுறுத்தல், அதிபர், உத்தரவு, டிரோன்கள், தென்கொரியா, வடகொரியா

இதையடுத்து, தென் கொரியா நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஆளில்லா விமானங்களை உருவாக்க முடிவு செய்தது. இந்தக் கொள்கையை தென்கொரிய ராணுவம் கடந்த மாதம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதன்படி செப்டம்பரில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்றும், வடகொரியாவுக்கு 10 ஆளில்லா விமானங்கள் வரை அனுப்பப்படும் என்றும் கருதப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆளில்லா விமானங்களை பயன்படுத்தினால் போர்க்களத்தில் திறம்படவும், திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|