Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது

தென்கொரியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது

By: vaithegi Thu, 18 Aug 2022 06:15:34 AM

தென்கொரியாவில்  தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது

தென்கொரியா: கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்கு பிறகு திடீரென கொரோனா பரவல் உயர தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.இதை அடுத்து நேற்று ஒரு நாளில் புதிதாக 1 லட்சத்து 80 ஆயிரத்து 803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 84,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அங்கு கடந்த ஏப்ரல் 13-ந்தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிகையாகும்.

corona,south korea ,கொரோனா,தென்கொரியா

இதையடுத்து ஏப்ரல் 13-ந்தேதி 1 லட்சத்து 95 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றை பாதிப்பை தொடர்ந்து தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் ஊரடங்கு வருமா? தொற்று பாதிப்பு உயர்ந்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதே சமயம் வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது பற்றி விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Tags :
|