Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Wed, 31 Aug 2022 4:24:32 PM

தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதை  ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதை ஒட்டிய பகுதிகளில் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.மேலும் நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யக்கூடும்.

இதை அடுத்து 01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, இருப்பூர்‌, இண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர்‌, விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rains,south tamil nadu ,கனமழை ,தென்‌ தமிழகம்‌,

அதைதொடர்ந்து 02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, இருப்பூர்‌, தேனி, இண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 03.09.2022 மற்றும்‌ 04.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Tags :