Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 25 Feb 2023 6:39:45 PM

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதனை அடுத்து வருகிற 27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,south tamil nadu coastal districts,delta districts ,மழை ,தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள்

அதையடுத்து மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|