Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு

By: Nagaraj Sat, 25 Nov 2023 7:06:22 PM

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே  அறிவிப்பு

சென்னை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற நவ. 26 ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெறயிருக்கிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப விழா நடைபெறும். இத்தீப விழாவின் சிறப்பாக 2668 அடி உயர மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். அந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை மெமு ரயில் (வண்டி எண்06127) நாளையும், நாளை மறு தினமும் (25, 26ம் தேதிகள்) இயக்கப்படுகிறது.

special trains,karthigai,deepth thirunal ,சிறப்பு ரயில்கள்,கார்த்திகை, தீபத் திருநாள், அறிவிப்பு, பக்தர்கள்

இதையடுத்து நாளை இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை செல்லும், மறு மார்க்கத்தில் திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாக (வண்டி எண் 06128) நாளை மறுநாள் (26ம்தேதி) மற்றும் 27-ம்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும்.

மேலும் இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த ரயில், வண்டி எண் 06034 ஆக வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் வரை இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :