Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் காரணமாக இன்று 24 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்று 24 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

By: Monisha Wed, 25 Nov 2020 10:01:37 AM

நிவர் புயல் காரணமாக இன்று 24 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிவர் புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 24 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்-மதுரை-எழும்பூர் (வண்டி எண்: 02613/02614), மதுரை- எழும்பூர்-மதுரை (02636/ 02635), எழும்பூர்- காரைக்குடி- எழும்பூர் (02605/02606), எழும்பூர்-செங்கோட்டை- எழும்பூர் (02661/02662) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

southern railway,nivar storm,special trains,cancellation,precaution ,தெற்கு ரெயில்வே,நிவர் புயல்,சிறப்பு ரெயில்கள்,ரத்து,முன்னெச்சரிக்கை

அதேபோல், நெல்லை- எழும்பூர்-நெல்லை (02632/ 02631), தூத்துக்குடி-எழும்பூர்- தூத்துக்குடி (02694/ 02693), எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர் (02633/02634), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர் (06723/06724), ராமேசுவரம்-எழும்பூர்-ராமேசுவரம் (02206/02205), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர்(06101/06102) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை-எழும்பூர்-மதுரை (02653/02654), எழும்பூர்-திருச்சி-எழும்பூர் (02653/02654) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :