Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ள மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ள மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

By: vaithegi Fri, 21 Oct 2022 6:18:57 PM

இந்த மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ள மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் .... தீபாவளி பண்டிகைக்கு நகர்புறத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் மக்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம். இதனால் பேருந்து மற்றும் ரயில் போன்ற அனைத்து வகை போக்குவரத்துகளிலும் அதிக கூட்ட நெரிசல் இருக்கும்.

இதனையடுத்து இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் போன்ற மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ள மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

southern railway,special train , தெற்கு ரயில்வே,சிறப்பு ரயில்


எனவே அதன்படி, சென்னை சென்ட்ரலில் அக்டோபர் 23ம் தேதி இரவு 8:45 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. இந்த ரயில் மறுமார்கத்தில் திங்களன்று மாலை 4:20-க்கு அங்கிருந்து கிளம்பி 25ம் தேதி காலை 6:20 மணிக்கு சென்னையை அடைகிறது. திருச்சியில் இருந்து நாளை 2.15 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் 27ம் தேதி இரவு 9:40 க்கு சிறப்பு ரயில் புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்.

இதையடுத்து தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேரும். மேலும், 26ம் தேதி மாலை 5 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பி 27ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :