Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை - அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை - அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

By: Monisha Mon, 08 June 2020 5:49:44 PM

குமரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை - அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. இந்த மழை நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு மழை லேசாக தூறல் போட்டது. அதன்பிறகு இரவில் பலத்த மழை கொட்டியது. மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 76.4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை 6.4, பெருஞ்சாணி 16.2, சிற்றார்1-2, சிற்றார்2-4, மாம்பழத்துறையாறு 9, திற்பரப்பு 7, புத்தன்அணை 18, நிலப்பாறை 13.4, இரணியல் 44, ஆணைக்கிடங்கு 9.2, குருந்தன்கோடு 24, அடையாமடை 8, கோழிப்போர்விளை 20, நாகர்கோவில் 12.4, சுருளோடு 5.6, பாலமோர் 4.6, மயிலாடி 18.4, கொட்டாரம் 5.2, முள்ளங்கினாவிளை 33, பூதப்பாண்டி 8.4, கன்னிமார் 2.6 மற்றும் திருவட்டார் 1.8 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

kanyakumari district,southwest monsoon,catchment areas,dams ,கன்யாகுமரி மாவட்டம்,தென்மேற்கு பருவமழை,நீர்பிடிப்பு பகுதிகள்,அணைகள்

மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 515 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 689 கனஅடியும், சிற்றார்-1 அணைக்கு 85 கனஅடியும், சிற்றார்-2 அணைக்கு 114 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 20 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.80 அடியானது எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மழை சற்று ஓய்ந்திருந்தாலும் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் குறையவில்லை. அவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Tags :