Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தில் தீவிரம் ..அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தில் தீவிரம் ..அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 26 Sept 2023 4:25:01 PM

தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தில் தீவிரம் ..அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தில் தீவிரமெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.மேலும் அது மட்டுமில்லாமல் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் அது தவிர மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப். 26) முதல 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

rainfall,tamil nadu,puducherry,karaikal,meteorological centre ,மழை, தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்,வானிலை ஆய்வு மையம்

அதே போன்று விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதே போல செப். 27 முதல் அக். 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வருகிற செப். 28 முதல் செப். 30 வரை தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


Tags :