Advertisement

இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

By: vaithegi Thu, 25 May 2023 3:22:46 PM

இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

இந்தியா: இந்திய வானிலை ஆய்வு மையமானது நாடு முழுவதிற்குமான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிப்பு ....

நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் அதிக அளவு வெப்பம் நிலவும் எனவும் , வெப்ப அலையின் பாதிப்பு காரணமாக பகல் நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான வானிலை அறிக்கை நிலவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. எனவே அதன்படி,ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கோடை வெப்பம் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வந்தது.

southwest monsoon,india meteorological department ,தென்மேற்கு பருவமழை ,இந்திய வானிலை ஆய்வு மையம்

இதனை அடுத்து நாடு முழுவதும் பரவலாக வெப்ப அலை ஓய்ந்துள்ளதாகவும், இதனால் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும், 2 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :