Advertisement

விண்வெளி குப்பைகள்... விஞ்ஞானிகள் கூறிய கருத்துக்கள்

By: Nagaraj Fri, 08 July 2022 4:09:02 PM

விண்வெளி குப்பைகள்... விஞ்ஞானிகள் கூறிய கருத்துக்கள்

நியூயார்க்: பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், விண்வெளியை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா தெரிவித்துள்ளது.

அதோடு விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள்.இதனால் துணி குப்பையும் அதிகரித்து விட்டது.

காற்று, நீர் மற்றும் மண் போன்ற பூமியின் இயற்கை வளங்களை எல்லாம் மாசுபடுத்திய மனித இனம் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், அந்த இடத்தை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. விண்வெளியில் இருக்கும் குப்பைகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான நகரும் குப்பைகளைக் கண்காணிக்கிறது.

விண்வெளி பயணத்திற்கு விண்வெளி குப்பை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுவரை சுமார் 9000 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 5000 செயல்படவில்லை. அவை சுற்றுப்பாதையில் சிக்கியிருப்பதால், அது பிற விணகலங்கள் அல்லது செயற்கை கோள்கள் மீது மோதினால் பெரும் சேதம் உண்டாகும்.

spaceship,future,utility,satellite,debris,technology ,விண்கலம், எதிர்காலம், பயன்பாடு, செயற்கைக்கோள், குப்பைகள், தொழில்நுட்பம்

விண்வெளியில் குப்பை பொருட்கள் நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுடன் எந்த நேரத்திலும் மோதலாம் என்ற நிலை உள்ளதால, விஞ்ஞானிகள் இது குறித்து தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.

அதோடு, விண்வெளி ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) மாதக்கணக்கில் வாழுகின்றனர். அங்கே சலவை செய்யும் வசதி இல்லாததால், விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதனால் விண்வெளியில் துணி குப்பையும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில், ஷாங்காய் அகாடமி ஆஃப் ஸ்பேஸ்ஃபிளைட் டெக்னாலஜி, விண்வெளி குப்பைகளை அகற்ற வெற்றிகரமாக ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏவப்பட்ட Long March 2 என்னும் ராக்கெட்டை ‘drag sail’ ஏனும் அமைப்பின் மூலம் இந்த சுற்று பாதைக்கு வெளியே நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இதில் உள்ள காத்தாடி போன்ற அமைப்பு விண்வெளி குப்பைகளை திரட்டி எடுக்கும் பணியை முடிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்பத்தை எளிதாக உருவாக்க முடியும் எனவும் கிட்டத்தட்ட அனைத்து வகையான செயற்கைக்கோள் குப்பைகளை நீக்க , இது குறைந்த செலவிலான தீர்வாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பயன்படுத்தப்படும் பொருள் இலகுரக மற்றும் நெகிழ்வானதாக இருப்பதால், விண்வெளி பயணத்தின் போது எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு விண்கலத்திற்குள் எளிதாக கொண்டு செல்ல முடியும் என்கின்றர்.

Tags :
|
|