Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... முன்பதிவு இன்று முதல் துவக்கம்

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... முன்பதிவு இன்று முதல் துவக்கம்

By: vaithegi Fri, 10 Feb 2023 3:57:09 PM

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்   ...   முன்பதிவு இன்று முதல் துவக்கம்

சென்னை :சிறப்பு பேருந்துகள் இயக்கம் .... இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பிப். 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

எனவே இதனை முன்னிட்டு தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் ஆகிய இடங்களில் மகா சிவராத்திரிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் சென்று வர ஏதுவாக தமிழக போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி நெல்லை கோட்டம் சார்பில் பிப். 18- ம் தேதி சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

special buses,transportation ,சிறப்பு பேருந்துகள்,போக்குவரத்து

இந்த பேருந்துகளில் நெல்லையிலிருந்து ரூ. 300 மற்றும் சங்கரன் கோவிலில் இருந்து ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நவகைலாய கோயில்களுக்கு சென்று வர ரூ. 600 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மேற்கண்ட தலங்களுக்கு செல்லவிருக்கும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags :