Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபவாளி பண்டிகை ... மக்களின் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள்

தீபவாளி பண்டிகை ... மக்களின் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள்

By: vaithegi Sat, 15 Oct 2022 10:15:45 AM

தீபவாளி பண்டிகை   ...  மக்களின் வசதிக்காக  சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள்

சேலம் : சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் .... கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சேலம் மண்டலத்தில் நகரம், புறநகர், மலைப்பேருந்துகள் உள்பட 1047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 1900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 13.36 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதில், 5.52 லட்சம் மகளிரும் பயணம் செய்கின்றனர். கடந்த ஜுலை 12ஆம் தேதி முதல் இன்று வரை பயணித்த மொத்த மகளிர் 20.12 கோடி ஆகும்.

இதனை அடுத்து போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் மூலம் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 21.10 2022 முதல் 23.10.2022 வரை சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூருக்கும், பெங்களுருவில் இருந்து சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கும், ஓசூரில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கும், சேலத்தில் இருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும் என 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

special buses,diwali ,சிறப்பு பேருந்துகள்,தீபவாளி

மேலும் 24.10.2022 முதல் 26.10.2022 வரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து, பெங்களுருவுக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் இருந்து ஓசூருக்கும், சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்பட உள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் நகரப்பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21.10.2022 முதல் 26.10.2022 வரை பயணிகள் தேவைக்கு ஏற்ப நகர பேருந்துகள் இயக்கப்படும். 21.10.2022 முதல் 26.10.2022 வரை அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தை கண்காணிக்க மற்றும் சீர்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21.10.2022 முதல் 26.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :