Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கும்பகோணத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இன்றும் , நாளையும் இயக்கம் என அறிவிப்பு

கும்பகோணத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இன்றும் , நாளையும் இயக்கம் என அறிவிப்பு

By: vaithegi Fri, 13 Oct 2023 10:49:11 AM

கும்பகோணத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இன்றும் , நாளையும் இயக்கம் என அறிவிப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், இரண்டாவது சனி, ஞாயிறு வார விடுமுறை, மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,

இதையடுத்து திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி,

special buses,chennai,transport corporation , சிறப்புப் பேருந்துகள் ,சென்னை,போக்குவரத்துக் கழகம்

மேலும் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பேருந்துகள் என கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இன்றும் , நாளையும் இயக்கப்பட உள்ளன.

விடுமுறைக்குப் பிறகு பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்குத் திரும்பச் செல்ல வருகிற 15, 16 ஆம் தேதிகளில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :