Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்... தஞ்சை கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்... தஞ்சை கலெக்டர் தகவல்

By: Nagaraj Sat, 22 Oct 2022 11:04:04 AM

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்... தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்விதசிரமம் இன்றி, இடையூறு இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

special buses,thanjavur,collector,diwali,festival ,சிறப்பு பஸ்கள், தஞ்சாவூர், கலெக்டர், தீபாவளி, பண்டிகை

திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக் கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இன்று முதல் 23ஆம் தேதிவரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|