Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Tue, 14 Nov 2023 11:08:35 AM

தீபாவளி முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்துகழகங்கள் சார்பில் கடந்த 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

எனவே இதன்படி, சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 1,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோன்று, ஆம்னி பேருந்துகளில் 1.50 லட்சம் பேர்பயணம் செய்திருந்தனர். இதன்மூலம் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

special buses,diwali festival ,சிறப்பு பேருந்துகள் ,தீபாவளி பண்டிகை


இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, நேற்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையடுத்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,100 அரசு பேருந்துகளுடன் 3,167 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு 9,467 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அதேபோல, பிற ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் 3,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவ.13 முதல் 15-ம் தேதி வரை3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுகின்றன.தீபாவளி விடுமுறை முடிந்து, பணிக்கு செல்பவர்கள் நேற்று ஊர் திரும்பினர். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நேற்று காலை முதலே சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.


Tags :