Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை ... மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை ... மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Wed, 12 Oct 2022 4:39:47 PM

தீபாவளி பண்டிகை  ...    மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் தீபாவளியையொட்டி 6,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ம் தேதி முதல் 23 தேதி வரை 2,100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

special buses,diwali , சிறப்பு பேருந்துகள்,தீபாவளி

அதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, பைபாஸ், மாநகராட்சி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :