Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிரிவலம் ... சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிரிவலம் ... சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 28 July 2023 2:51:39 PM

கிரிவலம் ...  சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி கிரிவலம் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 01 மற்றும் 02 -ம் ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

special buses,krivalam ,சிறப்பு பேருந்துகள்,கிரிவலம்

எனவே அதன்படி, ஆகஸ்ட்.1-ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும்.

இதையடுத்து பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி எண் 9445014452 ,தலைமையக கைப்பேசி எண் 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :