Advertisement

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Sat, 03 Dec 2022 8:53:27 PM

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை:சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... மிகவும் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை மாட வீதியில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டு வருகின்றனர்.

காத்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மகா தேரோட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து டிச.5 அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் டிச.6 மாலை அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்..

special buses,thiruvannamalai ,சிறப்பு பேருந்துகள் ,திருவண்ணாமலை

எனவே இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் . இந்த நிலையில் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிந்துள்ளது. இதில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இதேபோன்று திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும், திருக்கோவிலூரிலிருந்து 115 சிறப்பு பேருந்துகளும், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :