பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: Nagaraj Mon, 31 July 2023 8:11:56 PM
சென்னை: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வேலூர் மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை 1ம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பில், அன்றைய தினம் சென்னையில் இருந்து, வேலூரில் இருந்து 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
திருப்பத்தூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும், 30 சிறப்பு பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.