Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Thu, 04 May 2023 11:54:45 AM

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் சித்ரா பௌர்ணமியையோட்டி கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தில் பல பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர்.

இந்த நிலையில் நாளை சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக 1000 பேருந்துகளும்,

special buses,chitra poornami ,சிறப்பு பேருந்துகள் ,சித்ரா பௌர்ணமி

சென்னை ,கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களின் சார்பில் 1700 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இதையடுத்து இன்றும், நாளையும் வழக்கமான பேருந்துகளுடன் திருவண்ணாமலைக்கு 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, தஞ்சாவூர், தர்மபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர் ,மதுரை உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :