Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை ... மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

தீபாவளி பண்டிகை ... மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

By: vaithegi Tue, 11 Oct 2022 07:51:12 AM

தீபாவளி பண்டிகை  ...    மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு  பஸ்கள் இயக்கப்படும்

சென்னை: சிறப்பு பஸ்கள் ... தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கூடுதல் ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

16 ஆயிரத்து 888 பஸ்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 10 ஆயிரத்து 518 பஸ்களும்;மற்ற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

special buses,diwali festival ,சிறப்பு  பஸ்கள்,தீபாவளி பண்டிகை

இதையடுத்து தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,062 சிறப்பு பஸ்களும்; மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13 ஆயிரத்து 152 பஸ்களும் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்

முன்பதிவு : 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களிலும், தாம்பரம் மெப்சில் ஒரு மையத்திலும் என்று மொத்தம் 11 மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.


Tags :