Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Sun, 30 July 2023 6:57:27 PM

வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் .. போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பௌவுர்ணமி திருநாளில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக

சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வருகிற 01/08/2023 அன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் 02/08/2023 அன்று திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படவுள்ளது

special buses,thiruvannamalai ,சிறப்பு பேருந்துகள், திருவண்ணாமலை

அவற்றின் விவரம் கீழ் வருமாறு.
01/08/2023 அன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலை புறப்படும் நேரம் : 15.00, 16.00 மற்றும் 17.00
02/08/2023 அன்று திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு புறப்படும் நேரம் : 03.00, 04.00 மற்றும் 05.00 ஆகிய இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பேருந்து இயக்கம் பற்றிய தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452, தலைமையகம் 9445014463, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேபேருந்து வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Tags :