Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் இந்த தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் இந்த தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

By: vaithegi Wed, 16 Nov 2022 7:36:08 PM

நாளை முதல் இந்த தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

சபரிமலை : சிறப்பு பஸ்கள் இயக்கம் .... சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் பூஜைகள் நடைபெற உள்ளன.

இதனை அடுத்து மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பின், அன்று இரவு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் புல்மேடு மற்றும் கரிமலை பாதை திறக்கப்பட்டுள்ளது.

sabarimala,special buses , சபரிமலை, சிறப்பு பஸ்கள்

வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இடையே, நாளை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களின் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :