Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு

By: Nagaraj Fri, 28 Oct 2022 5:57:38 PM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு

சென்னை: சிறப்பு முகாம்... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது.

voter,enrollment,camp,instruction,district,polling station ,
வாக்காளர், பெயர் சேர்ப்பு, முகாம், அறிவுறுத்தல், மாவட்டம், வாக்குச்சாவடி

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்க உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் திருத்தம் செய்ய உள்ளவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|