Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இந்த தேதிகளில் சிறப்பு முகாம்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இந்த தேதிகளில் சிறப்பு முகாம்

By: vaithegi Tue, 21 Nov 2023 1:46:55 PM

சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இந்த தேதிகளில் சிறப்பு முகாம்

சென்னை : வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவ. 25, 26 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது ...சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக். 27 ஆம் தேதி வெளியானது. மேலும் வருகிற டிச. 9 ஆம் தேதி வரை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வையிட எதுவாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் வர இருப்பதால், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், புதிய இருப்பிடம் மாறியவர்கள் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

electoral roll,special camp ,வாக்காளர் பட்டியல்,சிறப்பு முகாம்

இதையடுத்து அந்த படிவங்களை பூர்த்தி செய்து, அதற்கான ஆதார நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வருகிற டிச. 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து சென்னையில் நவ. 25, 26 ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இந்த முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :