Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்று சிறப்பு முகாம்

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்று சிறப்பு முகாம்

By: vaithegi Sun, 04 Sept 2022 08:38:46 AM

சென்னையில்  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்று சிறப்பு முகாம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

polling station,voter id card aadhaar number,special camp ,வாக்குச்சாவடி ,வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்,சிறப்பு முகாம்

எனவே, இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர், பொதுமக்கள் என அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள தேவை இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :