Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் பெண்களுக்கு என சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் பெண்களுக்கு என சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Fri, 28 Oct 2022 1:11:28 PM

இந்த மாவட்டத்தில் பெண்களுக்கு என சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி : வேலைவாய்ப்பு முகாம் .... தனியார் துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் அடைவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் மாவட்டத்தின் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 29ம் தேதியாகிய நாளை காலை 9 மணிக்கு பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

employment camp,krishnagiri ,வேலைவாய்ப்பு முகாம்,கிருஷ்ணகிரி

கடந்த 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த முகாமில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

இந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும்

மேலும் இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.16,557 சம்பளமாகவும், இதனை தவிர உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :