9 மக்களவை தொகுதிகளில் தேர்தல் பணிகளில் சிறப்பு கவனம்
By: Nagaraj Wed, 11 Oct 2023 6:10:10 PM
சென்னை: சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணி... தமிழ்நாட்டில் 9 மக்களவைத் தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நெருங்கும் போது 39 தொகுதிகளுக்கும் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சென்னை போராட்டக் களமாகி உள்ளது எனத் தெரிவித்தார்.
மணல் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதால், அதை தமிழக அரசின் குற்றம் என்றே கருதலாம் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் எதிலும் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கூறினார்.
கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்வது இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்றும் முதலமைச்சர் இதில் சரியான பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.