Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்க சிறப்பு உரிமம்

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்க சிறப்பு உரிமம்

By: Nagaraj Mon, 24 Apr 2023 6:15:01 PM

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்க சிறப்பு உரிமம்

கோவை: தமிழகத்தில் கிளப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க ஏற்கனவே உரிமம் உள்ளது.

இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வீட்டு விருந்துகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்குவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கு வசதியாக தமிழக அரசு மதுவிலக்கு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

இந்த சிறப்பு உரிமம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், உரிம கட்டணம் செலுத்திய பின் கலெக்டரின் ஒப்புதலுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் பெற்றவர்கள் மாநகர காவல் ஆணையரிடம் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

explanation,halls,liquor,marriage,permission,senthil balaji, ,அனுமதி, செந்தில் பாலாஜி, திருமணம், மண்டபங்கள், மதுபானங்கள், விளக்கம்

இந்த உரிமதாரர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களையும், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களையும் விருந்தினர்களுக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் மதுபானம் பரிமாறும் உரிமை வெளியிடப்பட்டதாக வெளியான செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதி வழங்கப்படாது. எந்த நிகழ்ச்சிகளிலிலும் மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி அரசு வழங்காது. ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது’ என்று விளக்கமளித்தார்.

Tags :
|
|