Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு மெகா மருத்துவ முகாம் .. முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

சிறப்பு மெகா மருத்துவ முகாம் .. முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

By: vaithegi Sat, 24 June 2023 3:04:46 PM

சிறப்பு மெகா மருத்துவ முகாம்  ..  முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு


சென்னை: மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் முதல்வர் ட்விட் .... முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இன்று கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது . இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மெகா மருத்துவ முகாம் நடைபெறும் நிலையில் கோடம்பாக்கம் புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து இது பற்றி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது , வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

chief minister stalin,special mega medical camp ,  முதல்வர் ஸ்டாலின்,சிறப்பு மெகா மருத்துவ முகாம்

மேலும் வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு, சிறப்புப்பிரிவு மருத்துவர்களைக் கொண்டு, தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏழை - எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து நடத்தும் இம்முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்! என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :