Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது

இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது

By: vaithegi Sun, 29 Oct 2023 10:37:42 AM

இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 1,000இடங்களில்  மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறை சார்பில் வரும் நவம்பர்4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் நல்நாட்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 4 முதல் 5 மாதம் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு ரூ.1,000, 2-வது தவணையாக 5 முதல் 6 மாதம் ரூ.1,000, 3-ம் தவணையாக 9 மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படுகிறது.

இதையடுத்து இதுவரை 8,163 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 5,294 பேருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுடனான கூட்டம் நடைபெற்றது.

special medical camps,district deputy director,dept ,சிறப்பு மருத்துவ முகாம்கள் ,மாவட்ட துணை இயக்குநர்,தவணை

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் தொடர்பான புகார்கள் அந்தந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தெரிவிக்கலாம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இல்லைள்ளதால், மழைக்கால நோய்களுக்காக வரும் 29-ம் தேதி (இன்று)முதல் டிசம்பர் மாதம் வரை 10ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மழைநீர் வடிகால்வாய்களை கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.


Tags :