Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓய்வு பெறுபவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை திட்டம்

ஓய்வு பெறுபவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை திட்டம்

By: Nagaraj Sun, 05 July 2020 11:33:35 AM

ஓய்வு பெறுபவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை திட்டம்

சிறப்பு தபால் தலை திட்டம்... அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்க, சிறப்பு தபால்தலை திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.

அஞ்சல் உறையில், நாம் விரும்பும் நபரின் படத்தை வைத்துக்கொள்ளும், 'மை ஸ்டாம்ப்' திட்டம், 2014ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ, 300 ரூபாய் கட்டணமும் செலுத்தினால், ஐந்து ரூபாய் மதிப்புள்ள, போட்டோவுடன் கூடிய, 12 தபால் தலைகள் அடங்கிய அட்டை, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.

special post,plan,retirees,postage ,சிறப்பு அஞ்சல், திட்டம், ஓய்வு பெறுவோர், தபால் தலை

பள்ளி குழந்தைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும், 'மை ஸ்டாம்ப்' பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். பிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க, இச்சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்கவும், அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், 'ஹாப்பி ரிடையர்மென்ட்' என்ற, தலைப்பில், தபால்தலை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

'மை ஸ்டாம்ப்' போலவே, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையில், ஓய்வு பெறுவோரின் போட்டோவையும், இடம்பெற செய்யலாம். விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம், என அஞ்சல்துறை அறிவித்து உள்ளது.

Tags :
|