Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க விசேட செயலணி; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க விசேட செயலணி; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

By: Nagaraj Fri, 24 July 2020 10:57:12 AM

போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க விசேட செயலணி; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

விசேட செயலணி... பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விசேட செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கிராமிய பிரதேசங்களில் அத்தகைய செயற்பாடுகள் குறித்து பெயர் குறிப்பிடாது செயலணிக்கு தெரிவிப்பது மூலம் மக்கள் எதிர்பார்க்கும் இலக்கை விரைவாக அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன் போது மேலும் உரையாற்றிய அவர், உடுகம தள வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

president,secretary,drugs,campaign,election ,ஜனாதிபதி, செயலணி, போதைப்பொருள், பிரசாரம், தேர்தல்

முன் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் உட்சாகத்துடன் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டுமென வேட்பாளர் கீதா குமாரசிங்க பென்தர எல்பிட்டிய கோணகல சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

சங்கைக்குரிய பத்தேகம சமித்த தேரர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன் போது இந்துருவ பிரதேசத்தில் சுமார் 40 வீடுகளுக்கு இதுவரை குடிநீர் கிடைக்கப்பெறாத காரணத்தினால் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Tags :
|