Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவராத்திரி பண்டிகை தொடர் விடுமுறை ..சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

நவராத்திரி பண்டிகை தொடர் விடுமுறை ..சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

By: vaithegi Fri, 20 Oct 2023 3:49:48 PM

நவராத்திரி பண்டிகை தொடர் விடுமுறை  ..சென்னையில் இருந்து சிறப்பு ரயில்


சென்னை: நவராத்திரி பண்டிகை சமயங்களில் கிடைக்கும் விடுமுறைகள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து உள்ளதால் தொடர்ந்து 4 நாட்களுக்கு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை கிடைத்து உள்ளது. இத்தொடர் விடுமுறையின் காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிடுவார்கள்.

எனவே இதன் காரணமாக சென்னையில் இருந்து மங்களூருக்கு பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11:45 மணிக்கு புறப்படும் ரயில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மங்களூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

navratri festival,serial holiday,special train ,நவராத்திரி பண்டிகை, தொடர் விடுமுறை,சிறப்பு ரயில்


மேலும் அங்கிருந்து மறுமார்க்கமாக சனிக்கிழமை மங்களூர் ரயில் நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11:20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு ரயிலானது பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,

இதனையடுத்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூர், பையனூர், கண்ணங்காடு மற்றும் காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :