Advertisement

கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Fri, 27 Jan 2023 8:26:24 PM

கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில் இயக்கம் .... பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பயணிகளின் நலன் கருதி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பில், பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை – திண்டுக்கல் இடையே வருகிற ஜனவரி 27, 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5, 6 போன்ற தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதிகளில் காலை 9.20 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 11.43 மணிக்கு பழனியை சென்றடையும்.

special train,coimbatore,dindigul ,சிறப்பு ரயில்,கோவை , திண்டுக்கல்

அதன்பின்பு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மறுமார்க்கத்தில் திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில், மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு பழனியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இச்சிறப்பு ரயிலானது, கிணத்துக்கடவு, போத்தனூா், கோமங்கலம், பொள்ளாச்சி, மைவாடி சாலை, உடுமலைப்பேட்டை, புஷ்பத்தூா், பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :