Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையையொட்டி தென்காசி - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி தென்காசி - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Wed, 02 Aug 2023 11:54:11 AM

தீபாவளி பண்டிகையையொட்டி தென்காசி - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தென்காசி - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ... தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரையையொட்டி தென்காசியில் இருந்து வாரணாசிக்கு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ம் தேதி மதியம் 3:50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 11ம் தேதிய இரவு 10:30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

இதனை அடுத்து மறு மார்க்கமாக நவம்பர் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு 17ஆம் தேதி இரவு 7 25 மணிக்கு தென்காசியை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

tenkasi,varanasi,special train ,தென்காசி ,வாரணாசி ,சிறப்பு ரயில்

இந்த ரயில், தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக செல்லும்.

இதையடுத்து மருமார்கமாக வாரணாசியில் புறப்படும் ரயிலானது கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக தென்காசியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :