Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து ஒடிசாவுக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னையிலிருந்து ஒடிசாவுக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Sat, 03 June 2023 11:32:46 AM

சென்னையிலிருந்து ஒடிசாவுக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: சென்னையிலிருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ....

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. இதையடுத்து இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் 800-,க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

special train,chennai,odisha ,சிறப்பு ரயில்,சென்னை,ஒடிசா

மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மேலும், சென்னையிலிருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை அடுத்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த, பலியானோரின் உறவினர்கள் இந்த ரயில் மூலமாக புவனேஷ்வர் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :