Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையிலிருந்து பழனிக்கு இத்தனை நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்

கோவையிலிருந்து பழனிக்கு இத்தனை நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்

By: vaithegi Sat, 28 Jan 2023 07:55:00 AM

கோவையிலிருந்து பழனிக்கு இத்தனை நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை: 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், பழனி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல்-கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

எனவே அதன்படி, இந்த முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் (வ.எண்.06077) கோவையில் இருந்து இன்று, 29-ம் தேதி, வருகிற 4-ம்தேதி முதல் 6-ம் தேதி வரை காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் வந்தடைகிறது.

இதனை அடுத்து மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06078) திண்டுக்கல்லிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரெயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

special train,coimbatore,palani , சிறப்பு ரெயில்,கோவை, பழனி

எனவே இந்த ரெயிலில் மதுரை வர விரும்பும் பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவை-நாகர்கோவில் செல்லும் ரெயிலில் ஏறி மதுரை வந்தடையலாம்.

இதையடுத்து பழனி செல்ல விரும்பும் மதுரை பயணிகள் நாகர்கோவில்-கோவை செல்லும் ரெயிலில் மதுரையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடையும் வசதி உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :