Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லையில் இருந்து டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

நெல்லையில் இருந்து டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

By: vaithegi Wed, 12 Oct 2022 10:17:41 AM

நெல்லையில் இருந்து டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

நெல்லை: தென்மத்திய ரெயில்வே சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி, நெல்லையில் இருந்து மதுரை வழியாக பீகார் மாநிலம் பாட்னா அருகில் உள்ள டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எனவே அதன்படி, நெல்லையில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06190) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை அதிகாலை) 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இதையடுத்து 20-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு பீகார் மாநிலம் டானாபூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், டானாபூரில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06189) வருகிற 21-ந் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு 23-ந் தேதி நள்ளிரவு 1.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

special train,nellie , சிறப்பு ரெயில்,நெல்லை

அதைத்தொடர்ந்து மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கல்கலூர், பிமாவரம் டவுன், தன்கு, நிடதவோல், ராஜமுந்திரி, சாமல்கோட், தூனி, அனகாபள்ளி, துவ்டா, விழிநகரம், பாப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, கேசிங்கா, தித்லார்க், பாலங்கிர், பார்கர் ரோடு, சம்பல்பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, சக்ரதார்பூர், புரூலியா, ஜாய்சண்டி பாகர், அசனால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜஸ்தி, ஜகஜா, குலுல், மொகாமே, பக்தியார்பூர் மற்றும் பாட்னா போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் டானாபூரில் இருந்து நெல்லை வரும் சிறப்பு ரெயில் மட்டும் திருப்பூர், கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பாதைக்கு பதிலாக ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை வந்தடைகிறது.

Tags :