Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

By: Nagaraj Fri, 18 Aug 2023 4:47:50 PM

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில் இயக்கம்... வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் (எண். 06003) இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் தாம்பரத்தில் இருந்து 28-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

thambaram-velankanni,mata kovil festival,train movement,mata temple festival,tambaram,velankanni special train ,தாம்பரம்-வேளாங்கண்ணி, மாதா கோவில் திருவிழா, ரயில் இயக்கம்

அதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து 29-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06004) அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல் தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை (19-ம் தேதி) மாலை 5 மணிக்கு புறப்பட்டு 20-ம் தேதி காலை 8 மணிக்கு சென்றடையும். 20-ம் தேதி கொச்சு வெளியில் இருந்து புறப்பட்டு 21-ம் தேதி தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Tags :