Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் திருச்சி- செங்கல்பட்டு சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம்

நாளை முதல் திருச்சி- செங்கல்பட்டு சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம்

By: Nagaraj Mon, 15 June 2020 9:44:01 PM

நாளை முதல் திருச்சி- செங்கல்பட்டு சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

train time,change,chengalpattu,southern railway,announcement ,ரயில் நேரம், மாற்றம், செங்கல்பட்டு, தெற்கு ரயில்வே, அறிவிப்பு

செங்கல்பட்டு - திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

இந்நிலையில், நாளை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
|