Advertisement

சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Thu, 29 Dec 2022 1:44:51 PM

சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

சென்னை: முன்பதிவு தொடக்கம் ..... தமிழகத்தில் வரும் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே வாரியம் சென்னையில் இருந்து 10 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களின் விவரங்களை வெளியிட்டு, இதற்கான டிக்கெட் முன்பதிவை டிசம்பர் 29ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் துவங்கியுள்ளது. இறுதி நேர அவசர பயணத்தை தவிர்க்கும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இப்போதே முன்பதிவை செய்து கொள்வது நல்லது.

அதன்படி தாம்பரம்-திருநெல்வேலி: ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இதே ரயில், மறுமார்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சிறப்பு ரயில் (06022) சென்னை எழும்பூர் சேரும்.

இதனை அடுத்து தாம்பரம்-நாகர்கோவில்: ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வந்து அடையும். மேலும், மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்து அடையும்.

special trains,reservation , சிறப்பு ரயில்கள்,முன்பதிவு

தாம்பரம்-திருநெல்வேலி: ஜனவரி 16ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06057) மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சேரும்.
மறுமார்க்கமாக ஜனவரி 17ல் திருநெல்வேலியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல்: ஜனவரி 12ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.20 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் -டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும். இதே போன்று மறுமார்கமாக ஜனவரி 13ம் தேதி மதியம் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06046) மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளத்தில் சேர உள்ளது.

கொச்சுவேலி-தாம்பரம்: ஜனவரி 17 ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கமாக ஜனவரி 18 ல் காலை 10.30 மணிக்கு தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலியை சென்று சேரும்.

Tags :