Advertisement

சென்னையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

By: vaithegi Wed, 28 Dec 2022 09:51:18 AM

சென்னையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சென்னை: சிறப்பு ரெயில்கள் இயக்கம் .... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.இதனை அடுத்து இது பற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தாம்பரம்-நெல்லை(வண்டி எண் - 06021) இடையே இரவு 9 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 12-ந்தேதி தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லை-சென்னை எழும்பூர்(06022) இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது.

இதையடுத்து தாம்பரம்-நாகர்கோவில்(06041) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம்(06042) இடையே மாலை 5.10 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 16-ந்தேதி(திங்கள்கிழமை) நாகர்கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது.

special trains,chennai ,சிறப்பு ரெயில்கள் ,சென்னை

அதனைத்தொடர்ந்து கொச்சுவேலி-தாம்பரம்(06044) இடையே காலை 11.40 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 17-ந்தேதி கொச்சுவேலியிலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரம்-கொச்சுவேலி(06043) இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 18-ந்தேதி தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மேலுக்கும் எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர், சென்டிரல்(06046) இடையே இரவு 11.20 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 12-ந்தேதி எர்ணாக்குளத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்டிரல்-எர்ணாகுளம்(06045) இடையே மதியம் 2.50 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி சென்டிரலிலிருந்து இயக்கப்படுகிறது.

தாம்பரம்-நெல்லை(06057) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 16-ந்தேதி தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லை-தாம்பரம்(06058) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 17-ந்தேதி நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :